கிராமத்து முதியவர் ஒருவர் வாழ்க்கையின் இரகசியங்களைப் பற்றி எங்களுக்குத் தீட்சையளித்தார். எங்களுக்குச் சொன்ன மிகப்பெரிய இரகசியம் என்னவென்றால், நிகழ்வுகள்தான் மனிதர்களைக் கட்டுப்படுத்துகின்றன, மனிதன் நிகழ்வுகளைக் கட்டுப்படுத்துவதில்லை என்பதாகும். ஒரு மனிதனுக்கு வரும் திடீர் சோதனை அதற்கு முன் அவன் போன்ற மற்றவர்களுக்கும் ஏற்பட்டிருக்கும். மனிதனின் சாத்தியக் கூறுகள் எல்லாம் ஏற்கெனவே அனுபவிக்கப்பட்டவை. நல்லதாக இருந்தாலும், கெட்டதாக இருந்தாலும், நமக்கு ஏற்படுவதெல்லாம் ஒன்றும் புதிதல்ல. இருப்பினும், நாம் அனுபவிப்பது நமக்குப் புதிதாகத் தோன்றும், ஏனென்றால், மனிதன் ஒவ்வொருவனும் தனிப்பட்டவன் - ஒவ்வொரு இலையும் ஒவ்வொரு மரமும் தனிப்பட்டதாக இருப்பதைப் போல!
Be the first to rate this book.