சென்னை நகரத்தைக் குறித்து இதுவரை எழுதப்பட்ட அனைத்துப் புத்தகங்களிலிருந்தும் இந்நூல் முற்றிலும் வேறுபடுகிறது. ஏனெனில் இது அந்நகரத்தின் வரலாறு அல்ல. அந்நகரத்திலேயே பிறந்து வளர்ந்த ஒருவனின் கதையுமல்ல. ஊர் ஊராக, பேட்டை பேட்டையாக, தெருத்தெருவாக சுற்றிக் காண்பிக்கும் சுற்றுலாக் கையேடும் அல்ல. இது ஒரு தனி மனிதனின் ஆன்மா, ஒரு பெரு நகரத்தின் ஆன்மாவுடன் இரண்டறக் கலக்கும் பரவசக் கணத்தைப் படம்பிடிக்கிறது.
'சென்னையைத் தவிர இன்னோர் இடத்தில் என்னால் ஒரு சில தினங்களுக்குமேல் இருக்க முடியுமா என்று எப்போது வெளியூர் போனாலும் சந்தேகம் வரும். இந்நகரின் சத்தம் பாதுகாப்பு உணர்வைத் தருகிறது. இதன் அசுத்தமும் ஒழுங்கீனங்களும் அவசரமும் என் இயல்புக்குப் பெரிதும் பொருந்துகிறது' என்று பா. ராகவன் சொல்வதைச் சிறிது நுணுக்கமாகக் கவனித்தால் பிரமிப்புகளையும் வியப்புகளையும் தாண்டி, இந்நகரவாசம் ஒவ்வொரு தனி மனிதனையும் எவ்வாறு வடிவமைக்கிறது என்பதைக் காணலாம்.
Be the first to rate this book.