யானைகளை இயற்கையின் ஒரு பகுதியாகத்தான் நமது முன்னோர்கள் கருதினார்கள். மனிதன் எல்லா உயிர்களோடும் வாழ்வதுதான் முழுமையான வாழ்வு என்பதை அறமாகக் கொண்டிருந்தார்கள். குறிஞ்சி நிலத்தை காட்டுயிர்களின் வாழ்விடமாக விட்டுவைத்திருந்தார்கள்.
குறிஞ்சியும் முல்லையும் திரிந்தால் பாலையாகும் என்ற அறிவியல் பார்வை அவர்களுக்கு இருந்தது. இன்று குறிஞ்சியும் முல்லையும் வளர்ச்சியின் வன்முறையால் குதறப்படுகின்றன.
'காடு' இதழில் வெளிவந்து பரவலான வரவேற்பைப் பெற்ற கட்டுரையின் முழு வடிவமே இந்நூல்.
Be the first to rate this book.