பிரியத்தின் நிமித்தம் நிகழும் வாதைகள், தான் வாழும் நிலத்தின் மீது சமூகத்தின் மீது உயர்ந்திருக்கும் பிரக்ஞை அதனால் விளையும் தார்மீகக் கோபம் மற்றும் கையறு நிலை இவற்றைச் சொற்களாய் உருமாற்றம் செய்யும் போது விளைந்தவை இந்தக் கவிதைகள் எனத் தோன்றுகிறது. மிகச் செறிவும் ஆழமும் கொண்ட சொற்தேர்வுகள். இயல் வாழ்விலிருந்து எடுத்த படிமத் தருணங்கள் தொழிற்பட்டிருக்கும் விதம் இத்தொகுப்பை மேலும் செழுமையாக்குகின்றன.
மொழிதலின் சாத்தியங்கள் வெவ்வேறு தொனியில் ஒலிக்கும் விதமாக கவிஞர் தன் கவிதைகளைத் தொகுத்திருக்கிறார் என்று தோன்றுகிறது. தனது முந்தைய தொகுப்புகளில் இருந்து புதிய சொல்லாட்சிகளைப் பயின்று பார்த்திருக்கும் இக் கவிதைகள் வாழ்வின் அந்தரங்கமான வலிகளை,உளவியல் நடத்தைகளை, பாசாங்குகளை அணுக்கமான மொழியில் பேச விழைகின்றன.
- நேசமித்ரன்
Be the first to rate this book.