காப்பிய ஆதிரை கற்புக்கு இலக்கணமாக விதந்தோதப்பட்டவள். அவள் அமுதசுரபியின் அகன்சுரை நிறைதர இட்ட உணவு அள்ள அள்ளக் குறையாமல் பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுத்தது. இந்த ஆதிரை மானுடத்தின் உழல்துயர் அகலத் தன் கனவை நம்முன் விரிக்கிறாள். இக்கனவு இளையோரின் அகப்பசி அவிக்கும் தன்மையது. மனத்துக்கண் மாசிலாது வாழவிழையும் ஆதிரையின் வாழ்முறை தமிழின் தொல்படிமமாக மாறிவிட்ட கற்பின் வரையறைகளை மாற்றி எழுதுகிறது.
Be the first to rate this book.