உணர்ச்சிகரத்தின் உச்சமான தருணங்களை எளிய, நெகிழ்வான மொழி நடையில் சொல்லிவிடும் துடிப்பான பெருவெளிப் பாடல்கள் மனுஷியின் கவிதைகள் என்று ஒற்றை வரியில் சொல்லி முடிக்கலாம். தன்னந்தனியே வெவ்வேறு நிலவெளிகளினூடே இளமையின் தீவிரம் வழுவாத குரல், பாலியல், அன்பு, வன்மம், துரோகம், குழந்தைமை, மரணம், இரவு, வானம் என எல்லாவற்றையும் பாடிவிடுகிறார். கடவுள் சாத்தான் மனிதர் இம்மூவருக்குமிடையே நிகழும் உணர்வின் போராட்டங்களை, பலமுறை அல்லது எப்பொழுதும் நானே நஞ்சு அருந்த வேண்டிய சந்தர்ப்பங்களுடன் முன்வைக்கிறார். அப்படியான நெருக்கடியிலும் நஞ்சை முறிக்கும் மொழியாக மனுஷியிடம் உரம் கூடிய கவிதை இருக்கிறது.
- குட்டி ரேவதி
Be the first to rate this book.