இந்நுாலில் புத்தரின் வாழ்க்கைச் சுருக்கத்துடன் ஓளவையாரின் ஆத்திச்சூடியை பௌத்தத்தின் எண்மணிக் கொள்கையுடன் ஒப்பிட்டு எழுதியிருப்பதுடன் எண்மணிக் கொள்கைகள் இன்றைக்கு எவ்வாறு மேலைநாடுகளில் போற்றி பல்வேறு கோணங்களில் வளர்த்தெடுக்கப்பட்டு வருகின்றன என்பதை சிறப்பாக விளக்கியுள்ளார். இந்நுால் இன்றைய காலகட்டத்தில் மானுடச் சமுகத்திற்கு பெரிதும் தேவைப்படும் ஒன்று என்பதில் சந்தேகமில்லை.
பள்ளிகொண்டா. கி. கிருஷ்ணகுமார்.
தமிழகத்தில் பௌத்தம் உச்சம் பெற்று பண்பட்டச்சூழல் இருந்துள்ளதை வரலாறு சுட்டிக்காட்டுகிறது. நான்கு உண்மைகளும், ஐவகை ஒழுக்கங்களும், எண்வழிமார்க்கமும், பத்து நெறிகளும், கற்பித்துள்ள கற்பிதங்களாக அவாவை ஒடுக்கி, அன்பை்ப பெருக்கி தீயதைத் தவிர்த்து, உண்மை ஒளிகாணச் செய்த பௌத்தம் மறுக்கப்பட்டுள்ளதா? மறைக்கப்பட்டுள்ளதா? நவீனச் சூழலில் இதற்கான தேவை அதிகரித்திருப்பதை, ஐடி நிறுவனக் கணினியால் வாழ்வு தொலைப்பவர்களும், தொலைக்காட்சிப் பெட்டிகளில் முதுமையைத் தொலைப்பவர்களும். நிறுவனவயப்பட்ட மூளையோடு இயங்குபவர்களும் உணர்ந்து கொள்ள, விழித்துக் கொள்ள, மா. அமரேசன் அப்பாவின் சுண்டுவிரலைப் பிடித்து நடக்கும் குழந்தையைப் போல அவ்வையின் ஆத்திச்சூடியும் அயோத்திதாசர் மறுவாசிப்பும் குறித்துச் சிந்திக்க இழுத்துச் செல்கிறார்.
- முனைவர். அரங்க மல்லிகா
Be the first to rate this book.