இந்துமதம் எண்ணற்ற தவசிகளாலும், நாயன்மார்களாலும், ஆழ்வார்களாலும், ஆசார்யர்களாலும், பெரும் மகான்களாலும் செழிப்பாக வளர்க்கப்பட்டு வந்துள்ளது. அவர்கள் கடவுளைப் பற்றிய தமது சிந்தனைகளை மனித சமுதாயத்தின் முன் வைத்தனர். ஆத்மாவுக்கும், பரமாத்மாவுக்கும் உள்ள உறவை ஒவ்வொருவரும் தமக்குத் தாமே முடிவுசெய்து கொள்ள வழியமைத்துத் தந்துள்ளனர். அவர்களில் தென்னாட்டு இரத்தினங்கள் என்று கூறப்படுபவர்கள் மூவர் ஆவர். அவர்கள்: 1) அத்வைதத்தை நிலை நிறுத்திய ஆதிசங்கரர் 2) விசிஷ்டாத்வைதத்தை நிலை நிறுத்திய இராமானுஜர், 3) த்வைதத்தை நிலைநிறுத்திய மத்வாசாரியர். அத்வைதத்தை நிலைநிறுத்திய ஆதிசங்கரர், கேரள மாநிலத்திலுள்ள 'காலடி' என்னும் புண்ணியப்பதியில் தோன்றியவர்.
Be the first to rate this book.