ஆசிரியரின் டைரி மாணவர்களுக்கான டைரி என்பதே முக்கியத்துவப்படுத்தப்படுகிற இன்றைய கல்விச்சூழலில்,ஓர் ஆசிரியரின் டைரி எத்தகைய விவாதங்களை நம்முன் உண்டாக்க முடியும் என்பதற்குச் சான்றாக ஜான் ஹோல்ட்டின் ‘ஆசிரியரின் டைரி’ புத்தகத்தைக் கருத முடியும். தனது ஆசிரியப்பணியில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களின் வழியே சிறந்த மாணவர்களை உருவாக்கிட வேண்டும் என்ற நோக்கில் ஜான் ஹோல்ட் இப்புத்தகத்தை எழுதியுள்ளார்.பாராட்டு, தண்டணை என்ற மதிப்பீடுகள் மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்துகிற பாதிப்புகள் மாணவப்பருவத்தில் மட்டுமல்லாமல் அவர்களின் சமூக வாழ்க்கையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை இப்புத்தகம் அறிவுறுத்துகிறது.மேலும் இந்த மதிப்பீடுகள் மாணவர்களின் சுதந்திரமான கற்றலை தடை செய்வதோடு பயம், பதட்டம், மன அழுத்தம் போன்ற உளவியல் பிரச்சனைகளையும் ஏற்படுத்துகிறது என்பதையும் வேதனையோடு இந்நூலாசிரியர் பகிர்ந்து கொள்கிறார்.
Be the first to rate this book.