இருபதாம் நூற்றாண்டு இந்திய, உலக அறிஞர்கள், ஆளுமைகள் சிலரது சித்திரங்கள் இந்நூல். வரலாறு, சமூகம், மொழி சார்ந்து செயல்பட்ட இவர்களுடைய வாழ்க்கையினூடாகச் சமூக அசைவியக்கத்தைப் புலப்படுத்தும் நவீன நடைச்சித்திரங்கள் இவை. முற்றிலும் புதிய செய்திகள், அப்படியே தெரிந்த தகவல்களைச் சுட்ட நேர்ந்தாலும் அவற்றில் புதிய வெளிச்சம் பாய்ச்சுபவை இவை. தீரா ஆய்வின் நுட்பம், வாளினும் கூரிய சொற்கள், மிகையோ வெற்றுச்சொல்லோ பயிலாத் தொடர்கள், இவற்றுக்கும் மேலாக உலகளாவிய பார்வை போன்ற ஆ. இரா. வேங்கடாசலபதியின் தனித்துவங்கள் பல மிளிரும் சித்திரங்கள் இந்நூல்.
இந்த ஆளுமைகளைப் பற்றி முன்பின் அறியாதவர்களை இந்நூல் ஆச்சரியப்படுத்தும்; அறிந்தவர்களை மேலும் ஆச்சரியப்படுத்தும். எது மிகை என்பதில் சுவாரசியமும் புதிய தகவலும் போட்டிப் போட்டுத் தோற்கின்றன.
-பழ. அதியமான்
Be the first to rate this book.