மாயோன், சேயோன், வேந்தன், வருணர் என நிலத் தெய்வங்கள் இருந்த தொல்காப்பியர் காலத்துத் தமிழ் மண்ணில், பிற்காலத்தில்தான் வைதிகமும் பெளத்தமும் ஜைனமும் ஆசீவகமும் தோன்றின. பெளத்தமும் ஜைனமும்போலவே ஆசீவகமும் வடபகுதியில் இருந்து தமிழகத்துக்கு வந்தது என்று பலரும் பல காலமாகச் சொல்லி வந்த நிலையில், ஆசீவக சமயம் என்பது தமிழகத்தில்தான் தோன்றியது, அதனை உருவாக்கிய மற்கலி கோசாலர் சங்ககாலப் புலவர் என்றும் அவரே ஐயனாராக தமிழ் நிலத்தில் வழிப்பட்டு இன்றும் போற்றிப் பாதுகாக்கப்பட்டு வணங்கப்படுகிறார் என்ற மிக முக்கியமான ஆய்வு நூலை பேராசிரியர் க.நெடுஞ்செழியன் படைத்துள்ளார். தேவிபிரசாத் சட்டோபாத்தியாய, இந்திய தத்துவ இயல் பற்றி எழுதியதில் குறிப்பிடத்தக்கவர் என்றால், பேராசிரியர் க.நெடுஞ்செழியன், தமிழக தத்துவ இயல் பற்றி கனமான ஆய்வுகளைத் தொடர்ந்து செய்து வருபவர்.
இந்திய மெய்யியல் வரலாற்றில் அஜிதகேசம்பாளர், பூமணர், பக்குடுக்கையார், மற்கலிகோசலர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இதில் மற்கலிகோசலர்தான் ஆசீவக சமயத்தைத் தோற்றுவித்தவர். அவர் தமிழர்தான் என்பதை தமிழ் மரபு, பெளத்த மரபு, ஜைன மரபு வழிபட்ட ஆதாரங்களுடன் நிறுவுகிறார்.
வடநாட்டில் 3ம் நூற்றாண்டுவரை மட்டுமே இருந்த ஆசீவக சமயம், தென்னகத்தில் 14ம் நூற்றாண்டு வரையிலும் இருந்துள்ளது. ஜைனம், பெளத்தம் தோன்றிய காலத்தில் இந்த சமயம் தோன்றியுள்ளது. வேதத்தையும் வேதப் பண்பாட்டையும் மறுத்து இந்த சமயம் தோற்றுவிக்கப்பட்டு உள்ளது. கொல்லாமையும் புலால் உண்ணாமையும் இதனுடைய நெறியாக இருந்துள்ளன. அதனால்தான் ஐயனார் கோயிலில் பொங்கல் படைப்பது மட்டுமே வழக்கமாக இருந்துள்ளது. அங்கு இருக்கும் கருப்புக்குத்தான் கடா வெட்டுவார்கள். கருப்பு இல்லாத ஐயனார் கோயில்கள் எங்கும் இருக்காது. ''போரில் உயிர்துறந்த வீரர்கள் கருப்புகளாக ஐயனார் கோயில்களில் இடம்பெற்றனர். இந்தக் கருப்புகள் சமகாலத்தவர்கள் இல்லை. காலந்தோறும் மக்களின் மனம் கவர்ந்த வீரர்கள் மறைந்த பின்னர் ஐயனார் கோயில்களில் கருப்புகளானார்கள். அப்படி ஆன கருப்புகளில் மதுரைவீரனும் காத்தவராயனும் அடக்கம். இதனாலும் காவல் தெய்வமாக வணங்கப்படும் 18ம்படிக் கருப்பு ஆசீவகத்தோடு கொண்டுள்ள தொடர்பை உறுதி செய்யலாம்' என்கிறார் க. நெடுஞ்செழியன்.
5 Must read each & every Person.. such a great work ☺️
என் வாழ்வில், சமயங்களில் பெரும் திருப்புமுனை என்றால் அது இந்த படைப்பு !!
SaravanaKumar 13-02-2020 03:36 pm