யோகக்கலையானது ஆண், பெண், இளையவர், முதியவர் என்ற பேதமின்றி ஆரோக்கியத்தையும் இளமையையும் தந்து ஆசீர்வதிக்கிறது என்றால் மிகையில்லை.
சித்தர்களும், யோகிகளும் நம் இல்லற வாழ்வு சிறக்கவே யோகாசனக் கலையை சீதனமாக விட்டுச் சென்றுள்ளனர்.
நவீன யுக்கத்துப் படைப்பாளியான எழுத்தாளர் ஜெகதா நம் இந்தியப் பண்பாட்டு கலாச்சாரத்தின் வேர்களை நேசித்து நீண்டகாலமாக தன்னுடைய எழுத்துக்களில் அதன் வாசனையை கமழச் செய்து வருபவர்.
நூற்றுக்கும் மேற்பட்ட இவரது பல்துறையைச் சார்ந்த நூல்களை இன்றைய முன்னணிப் பதிப்பகங்கள் வெளிக்கொணர்ந்து இவரது எழுத்து வேள்விக்கு கட்டியம் கூறுகின்றன.
சித்தர் அனுபவ ஞானத்தின் ஒரு பகுதியான யோகாசனக் கலையின் நுட்பங்களை உணர்ந்து அனுபவ பூர்வமாக, இந்நூலில் ஆரோக்கியம் தரும் ஏராளமான ஆசனங்களை வகுப்பறை மாணவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதுபோல் எழுதியுள்ளார் ஜெகாதா.
நம்முள் இருக்கும் சிரஞ்சீவிக் கனவுகளை இந்நூலின் ஆசனப்பயிற்சி நனவாக்கும் நிச்சயம்.
Be the first to rate this book.