ஆரோக்கியமான உணவு குறித்த விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் பல இளைஞர்கள் இல்லாத துரித உணவு போன்ற ஆரோக்கியமற்ற, சுகாதாரமற்ற உணவுப் பொருள்களைச் சாப்பிடுகின்றனர். இதனால் பல வகையான உடல் நலக் கோளாறுகளுக்கு ஆளாகின்றனர். மேலும் பள்ளிகளுக்குச் செல்லும் குழந்தைகளில் பலர் தங்கள் வயதிற்கு இருக்க வேண்டிய உடல் எடையை விட அதிகமாக இருக்கிறார்கள் என்பதனை பல ஆராய்ச்சியின் மூலம் அறிய வருகிறோம்.
ஆகையால் நமது குடும்பத்தினருடைய ஆரோக்கியத்தை வளமாக்க வேண்டுமெனில் நமது உடலுக்குத் தேவையான சத்துகள் பற்றியும் அவற்றின் அளவுகள் பற்றியும் தெரிந்து கொள்வது அவசியம். ஆரோக்கியத்திற்கு ஆதாரமாக இருப்பது நாம் சாப்பிடும் உணவு தான்.
பிறந்த குழந்தை முதல் வயதானவர் வரை ஒவ்வொரு பருவத்திலும் சாப்பிட வேண்டிய உணவுப் பொருள்கள்,அவற்றின் சத்துகள் உணவின் அளவு,செய்முறை விளக்கம் போன்ற பல தகவல்கள் விரிவாக சொல்லப்பட்டுள்ளது இப்புத்தகத்தில்.
Be the first to rate this book.