#ஆரண்யம்
#கயல்
பெண்களின் இரசனைகளை எவர் அளவிலும் அளவிட முடியா முடிவுறா தொகுப்பு அது இவர் அளவிலும் உண்டு
நிலம் , நீர் , காற்று , ஆகாயம் , நெருப்பு , நாரை , கூழங்கற்கள் , ஆறுகள் , மலர்கள் அதன் நிறங்கள் , யானைகள் , புற்கள் , மகரந்தம் , குருவிகள் , பச்சை புறா , ஆந்தையின் அலரல் இன்னும் எத்தனையோ பல இதனுள்ளே இவரின் காட்டுக்குள்ளே
தொகுப்பை வாசித்து முடித்த நேரம் முயலின் மென்னை , காடுகளின் வாசனை , பூக்களின் முகம் , குருவிகளின் சப்தம் , பவழ மல்லியின் வாசம் , யானையின் உருவம், குளத்தின் குளிர்ச்சியென நீள்கிறது மனம் .
இந்த கவிதை தொகுப்பின் அழகியலே , காட்டின் அழகியலும் அழிந்த விதமும் அதனோடு சமூக மதிப்பீடும் ஒவ்வொரு கவிதையிலும் உணர்த்துகிறது.
காடுகளை வைத்து மட்டுமே அரசியல் , நம்பிக்கை , தத்துவம் , ஆன்மிகம் , எள்ளல் , ஞானம் , ஓலம் , என இவர் பறந்து மகரந்தசேற்றை அப்பிய இடங்கள் ஏராளம்.
எனதளவில் காடுகளை இவர் அளவில் எவர் வேண்டுமானால் கூறலாம் ஆனால் இவர் வடித்த பூக்களின் வாசனையை , யானையின் வேதனையை , கூழங்கற்களின் சங்கீதத்தை , அகதிகளின் அகராதியை , விவசாயியின் துயரத்தை , சாமந்தி பூவில் அமர்ந்த வண்ணத்துப்பூச்சியை , ஆறு வற்றிய கதையை , சுரபுன்னை அழகை , ஆறு வரிகளுக்குள் விவரிப்பது சிரமம்
ஒரு போர்வீரனின் கைகளிலிருந்து வாளினை பிடிங்கி எறிந்துவிட்டு இந்த புத்தகத்தை படித்து முடிக்கச் சொன்னால்
அவன் முடிக்கும் தருவாயில் அவன் மார்பில் அமுது சுரக்கும் பூமித்தாயாய் மாறி இருப்பது உறுதி .
#அமாசே
4 மென்வருடலுக்கு
#ஆரண்யம் #கயல் பெண்களின் இரசனைகளை எவர் அளவிலும் அளவிட முடியா முடிவுறா தொகுப்பு அது இவர் அளவிலும் உண்டு நிலம் , நீர் , காற்று , ஆகாயம் , நெருப்பு , நாரை , கூழங்கற்கள் , ஆறுகள் , மலர்கள் அதன் நிறங்கள் , யானைகள் , புற்கள் , மகரந்தம் , குருவிகள் , பச்சை புறா , ஆந்தையின் அலரல் இன்னும் எத்தனையோ பல இதனுள்ளே இவரின் காட்டுக்குள்ளே தொகுப்பை வாசித்து முடித்த நேரம் முயலின் மென்னை , காடுகளின் வாசனை , பூக்களின் முகம் , குருவிகளின் சப்தம் , பவழ மல்லியின் வாசம் , யானையின் உருவம், குளத்தின் குளிர்ச்சியென நீள்கிறது மனம் . இந்த கவிதை தொகுப்பின் அழகியலே , காட்டின் அழகியலும் அழிந்த விதமும் அதனோடு சமூக மதிப்பீடும் ஒவ்வொரு கவிதையிலும் உணர்த்துகிறது. காடுகளை வைத்து மட்டுமே அரசியல் , நம்பிக்கை , தத்துவம் , ஆன்மிகம் , எள்ளல் , ஞானம் , ஓலம் , என இவர் பறந்து மகரந்தசேற்றை அப்பிய இடங்கள் ஏராளம். எனதளவில் காடுகளை இவர் அளவில் எவர் வேண்டுமானால் கூறலாம் ஆனால் இவர் வடித்த பூக்களின் வாசனையை , யானையின் வேதனையை , கூழங்கற்களின் சங்கீதத்தை , அகதிகளின் அகராதியை , விவசாயியின் துயரத்தை , சாமந்தி பூவில் அமர்ந்த வண்ணத்துப்பூச்சியை , ஆறு வற்றிய கதையை , சுரபுன்னை அழகை , ஆறு வரிகளுக்குள் விவரிப்பது சிரமம் ஒரு போர்வீரனின் கைகளிலிருந்து வாளினை பிடிங்கி எறிந்துவிட்டு இந்த புத்தகத்தை படித்து முடிக்கச் சொன்னால் அவன் முடிக்கும் தருவாயில் அவன் மார்பில் அமுது சுரக்கும் பூமித்தாயாய் மாறி இருப்பது உறுதி . #அமாசே
magimai xavier 30-08-2020 09:31 am