மேற்குவங்கத்தில் தூக்குத் தண்டனை நிறைவேற்றும் தொழிலை நூற்றாண்டுகளாக பரம்பரைத் தொழிலாகச் செய்துவரும் ஒரு குடும்பத்தைக் குறித்து எழுதப்பட்ட மலையாளப் புதினம். அக்குடும்பத்தில் ஒருத்தியான இருபத்தியிரண்டு வயது இளம் பெண் சேதனாவின் பார்வையில் கொல்கத்தாவின் வரலாறும் நிகழ்காலமும் ஊடாட, காதலின் தூக்குக்கயிறு இறுக்கி மூச்சுத் திணறும், 'ஆராச்சார்' புதினம் ஒரு காவியமாக விரிகின்றது. விளிம்புநிலைப் பெண் குரலை ஓங்கி ஒலிக்கச் செய்யும் இப்புதினம் ஊடக அரசியல், சமூக அவலங்கள், சாதிக் கோட்பாடுகள், பாலின ஏற்றத்தாழ்வுகள் எனப் பல்வேறு விஷயங்களையும் நுட்பமாக அலசி ஆராய்ந்து வாசகர்களின் முன் வைக்கிறது. இப்புதினத்திற்கு வயலார் விருது, ஓடக்குழல் விருது, கேரள சாகித்திய அகாதெமி விருது, மத்திய சாகித்திய அகாதெமி விருது எனப் பல மதிப்புவாய்ந்த விருதுகள் கிடைத்துள்ளன.
5 Must Read
மிகச்சிறந்த கதை சூழலை அதன் உருமாறாது மொழிபெ யர்ப்பு செய்யப்பட்ட நூல். தற்கால OTT மற்றும் Series போன்ற கதைக்களங்களுக்கு மொழி பெயர்ப்பு நூல்கள் ஒருபோதும் சலித்ததில்லை என்பதை மெய்பிக்கும் நூல். நினைவுகளில் தொடங்கி, நிகழ்காலத்தில் வாழ்ந்து, இரண்டிற்கும் உள்ள தொடர்பை சுருக்குகளாக ஒவ்வொரு அதிகாரத்திலும் போட்டுள்ளார் ஆசிரியர். அதனை முதல் வாசிப்பில் சுருக்குகளை அவிழ்க்கும் வழி வாசகருக்கு தெரிந்தால், மறுவாசிப்பில் அச்சுருக்கின் அழுத்தம் வாசகரின் மனதில் உணரப்படும். நிச்சயம் இறுதியில் வாசகனை அடுத்த நிலைக்கும் நகர்த்தும்.
Dhanabalan vengatajalam 31-08-2022 11:20 pm