தமிழ்ச்சிறுகதை புதிய பரிணாமங்களைக் கண்டிருக்கிறது. சிறந்த சிறுகதைகளை அடையாளம் காட்டும் விமர்சகர்கள் பார்வையில் ஆர். சூடாமணியின் கதைகள் சிறப்பிடம் வகிக்கின்றது. ஆர். சூடாமணியின் எழுத்துக்கள் வாழ்வில் நேர்ந்திடும் பிரச்சினைகளை பரிவுடன் பரிசீலிப்பவை. அன்பும், மனிதாபிமானமும் அவருடைய எழுத்துக்களில் அடிநாதமாக ஒலிக்கக் கேட்கலாம். 'ஆர். சூடாமணி கதைகள்' என்ற இத்தொகுதியில் உள்ள கதைகள் அவர் எழுதிய சிறுகதைகளிலிருந்து அவரே தேர்ந்தெடுத்து தந்துள்ளவை. ஒவ்வொரு கதையும் அதன் அளவில் பிரதானமானவை என்பதை வாசகர்கள் அறிவார்கள். கதைகளைப் படித்து முடித்தவுடன் அதில் உறவாடும் உணர்வுகள் மனசில் அலையாடிக் கொண்டிருக்கும். '
Be the first to rate this book.