பிரஞ்சு, தமிழ், ஆங்கில மொழிகளுக்கிடையே மொழிப்பாலம் அமைத்து வரும் சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர் (1963), புதுச்சேரியில் பிரஞ்சுப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். சுவிட்சர்லாந்து பிரஞ்சு எழுத்தாளர் ‘பிலேஸ் சாந்த்ரார் படைப்புகளில் விலகித்தப்புதல்’ எனும் ஆய்வினை முடித்து பிரஞ்சு மொழியில் முனைவர் பட்டம் பெற்றவர்.
குறுந்தொகையை முழுமையாக பிரஞ்சு மொழியாக்கம் செய்துள்ளவர். தமிழ்ச் சிறுகதைகள், கவிதைகள் முதலியவற்றை பிரஞ்சு மற்றும் ஆங்கில மொழிகளில் மொழியாக்கம் செய்துள்ளவர்.
காலச்சுவடு பதிப்பில், ஹினெர் சலீமின் அப்பாவின் துப்பாக்கி எனும் பிரஞ்சுப் புதினத்தைத் தொடர்ந்து, நோபல் பரிசுபெற்ற லெ கிளெஸியோவின் சூறாவளி (‘அடையாளம் தேடி அலையும் பெண்’ உள்ளிட்ட இரண்டு குறு நாவல்கள்) எனும் நூலை மொழிபெயர்த்துள்ளவர்.
‘நற்றிணை’ பதிப்பில், ‘கலகம் செய்யும் இடது கை’, ‘கடவுள் கற்ற பாடம்’ ஆகிய தலைப்புகளில், பிரஞ்சுக்கதைகளின் மொழியாக்கத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளவர்.
Be the first to rate this book.