கடந்த பத்தாண்டுகளில் கவிஞர் சமயவேல் எழுதிய பல்வேறு நூல்களின் வாசிப்பு குறித்த கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். மிகச் சிறந்த சிறுகதைகளையும், நாவல்களையும் வாசித்தல் என்பது ஒரு மெய்நிகர் வாழ்தல். நமது கடந்த வாழ்வைப் பரிசீலித்தல் அல்லது வரும் வாழ்வின் மன ஒத்திகை அனுபவங்களை அனுபவித்தல். ஒரு கதை சொல்லியின் கண்களை இரவல் வாங்குதல். கவிதைகளை வாசித்தல் என்பதோ மொழியின் அருஞ்சுனை ஆழத்தில் மூழ்குதல், மூச்சு முட்ட நீந்துதல். கவியின் உதடுகளில் வழியும் மதுவைத் திருடுதல். எந்த வரியிலேனும் துடிக்கும் இதயத்தைக் கைகளில் ஏந்துதல், வாசிப்பின் பேரனுபவத்தை வாசகருக்கும் கடத்தும் முயற்சியே இக் கட்டுரைகள். இவை. ’துய்ப்பு விமர்சனம்’ (Appreciative Criticism) என்ற வகையில் அடங்கும்.
Be the first to rate this book.