எல்லா விலங்குகளிலும் உள்ள ஆண்-பெண் பாகுபாடு போல இல்லை. மனிதர்களில் உள்ள ஆண்-பெண் பாகுபாடு. ஆணின் விலா எலும்பிலிருந்து பிறந்து வேறு ஒரு விலங்காகவே மாறியிருக்கிறாள் பெண். சிந்திக்கத் தெரிந்த விலங்காக இருப்பதால் ஏராளமான மாறுபட்ட கருத்துக்கள் இருவருக்குள்ளும். நடை, உடை, பாவனை தொடங்கி. எதிர்பார்ப்பு நம்பிக்கை, பிடிவாதம், இயலாமை, இயல்பு, கையெழுத்து, குரல் ,சிந்தனை எல்லாவற்றிலும் இழையோடும் மெல்லிய துருவபந்தம். பொழுதுபோக்கு மட்டுமின்றி, அரசியல் விஷயங்களிலும் கணவன்களிடம் விலகி முடிவெடுத்தார்கள் மனைவிகள். அந்தவிதத்தில் பொழுதுபோக்கு, அரசியல் இரண்டிலும் தன்னிகரில்லா ஒரு வரலாற்று நாயகன் இநத் நாவலின் மையப்புள்ளியாகியிருக்கிறார்.
Be the first to rate this book.