ஆண் பெண் இருவரையும் இணைக்கும் ரசவாதி ‘அன்பு’. இதுமட்டும் அல்ல... தோழமை, பரஸ்பர மரியாதை, விட்டுக் கொடுத்தல் என யாவும் அன்பின் அடிப்படையில் இருப்பதே. ‘உனக்காக நான் ஏன் என்னை மாற்றிக்கொள்ள வேண்டும்...’ என ஆணும், ‘இது என் குணம். நான் இப்படித்தான்...’ என பெண்ணும் முற்றிலும் நேர்மாறான, எதிர் எதிர் துருவங்களாக, பாசாங்கு பாசத்தோடே வாழ்வது, விரிசல் விழுந்த கண்ணாடிப் பாதையில் பயணிக்கும் வாழ்க்கையாகவே அமைந்துவிடும்.
ஆண்-பெண் சிக்கல்கள், மூன்றாம் பாலினம் அடையும் தொந்தரவுகள், குழந்தைப் பருவ சிநேகிதம், பாலியல் குமுறல்கள் என இந்த நூலில் பதிவாகியிருப்பவை, வாசகர்களின் மனதில் அழியாத தாக்கம் தந்து ஆண்பாலும் பெண்பாலும் அன்பால் கடந்து வெற்றி வாழ்க்கையின் பாதையை நோக்கிப் பயணிக்க வைக்கும் என்பது உறுதி. ஆண் பெண் உறவு குறித்து பிரபலங்கள், திரைத்துறையினர், சமூகச் செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர்களின் கருத்துகளையும், கவிதைகளையும் ஆங்காங்கே தந்திருப்பது நூலுக்கு மேலும் சிறப்புச் சேர்க்கிறது.
போலியான அறிவுஜீவித்தனம் இல்லாத, பட்டறிவு, அனுபவ ஞானமிக்க, வெள்ளந்தித்தனமும், எளிமையான நடைமுறை வாழ்க்கையில் பிடிப்பும் உள்ள, கொஞ்சம் அறவுணர்வும் கொண்ட, என்னைப் புரிந்துகொண்ட என் வாழ்வின் துணையாக வருகிற இணை, ஒருபோதும் ஒத்த ரசனை, தேர்ந்த ஒற்றுமையான விருப்பங்கள் பாசாங்கு அற்றவனாக, பொய்யற்ற யதார்த்தமான அன்பைப் பகிர்பவனாக, பரஸ்பர நம்பிக்கையும் மதிப்பும் தன்மேல் கொண்டவனாக, தன் சுயத்தை இழக்காதவனாக... இப்படியான எதிர்பார்ப்புகளை இருவருமே புரிந்து கடைப்பிடித்து வாழ்தல், காத்திருக்கும் இனிப்பான வாழ்வை நோக்கி கைகோத்து பயணிக்கலாம் என்கிறது இந்த நூல்.
Be the first to rate this book.