இத்தொகுப்பிலுள்ள கட்டுரைகளை மொத்தமாகப் படிக்கின்றபோது மனம் துவண்டு விடுகிறது. நம் காலம் இத்தனை கொடூரமாகவா இருந்திருக்கிறது? பசு இறைச்சிக்காக எத்தனை மனிதர்கள் அடித்துக் கொல்லப்பட்டிருக்கின்றார்கள்? வெறுப்பு அரசியலின் துர்வாடை நம் காலத்தில் வீசியிருக்கிறது. பணமதிப்பு நீக்கத்திற்காக அடிமைகளைப்போல வங்கி வாசலில் நாம் நிறுத்தப்பட்டிருக்கின்றோம். நமது பூமி களவாடப்பட்டிருக்கின்றது. எதேச்சதிகாரத்தின் கைகள் நம் கழுத்தை நெரிக்கின்றது. நம் வாழ்ந்த காலத்தில்தான் மூச்சுதிணறி நூற்றுக் கணக்கான குழந்தைகள் செத்து மடிந்திருக்கின்றன. வட்டியின் தீ நாக்குகளுக்கு பிஞ்சுகளைத் தின்னக் கொடுத்த காலமும் இதுதான். மனித உரிமை காலில் போட்டு மிதிக்கப்பட்ட நாள்களின் சாட்சிகளாக நாம் இருந்திருக்கின்றோம். விழுமம் தொலைந்த அரசியலின் அவலங்களை இனியொரு தலைமுறை எள்ளி நகையாடும் நிகழ்வுகளை இந்த காலம் உள்ளடக்கியிருக்கிறது. இந்த காலத்தில் ஒப்பனைக் கலைஞர்கள் ஆன்மிக அரசியல் பேசியிருக்கின்றார்கள். நம் தலைமுறை இந்த காலத்தைத் திரும்பிப்பார்க்கும். இந்த காலத்தை ஆய்வு செய்யும். அப்போது வாழ்ந்த மனிதர்கள் என்ன செய்தார்கள்? அவர்களின் மனசாட்சி உயிர்ப்பித்துக் கிடந்ததா? என்று வினா எழுப்பும். அதற்கான விடைகள்தாம் இந்த நூல்.
Be the first to rate this book.