ஆன்மீகமும் அரசியலும் இன்று மட்டுமல்ல. அவை தொடங்கிய நாள்களிலிருந்தே நம் கண்களைக் கட்டி வைத்திருக்கின்றன. ஆன்மீகத்தால், அரசியலால் மக்கள் முன்னேறியிருக்கிறார்கள் அல்லது மாற்றம் பெற்றிருக்கிறார்கள் என்பதற்குச் சில உதாரணங்கள் இருந்தாலும், பெருவாரியான மக்களின் இழப்பிற்கும், தன்னலத்திற்கும், குறுகிய மனப்பான்மைக்கும் காரணம் ஆன்மீகமும், அரசியலும்தான்.
ஆன்மீகத்துக்கும் அரசியலுக்கும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன.
ஆன்மீகத்துக்கும் அரசியலுக்கும் தேவையான தகுதி என்று பார்க்கும்போது எந்தக் கல்வித் தகுதியோ, சமுதாய அந்தஸ்தோ தேவையில்லை. ஓர் அரசியல் இயக்கம் நடத்துவதும் ஓர் ஆன்மீக இயக்கம் நடத்துவதும் கிட்டத்தட்ட ஒன்றுதான். இரண்டிற்கும் ஒரேவிதமான தேவைகள்தான். ஒரேவிதமான சவால்கள்தான். நமது தேசத்தில் அரசியலும் ஆன்மீகமும் இரண்டறக் கலந்ததாகவே இருந்து வந்திருக்கிறது.
சாணக்கியர் காலம் தொடங்கி ரஜினி சொன்ன “ஆன்மீக அரசியல்” வரை வரலாற்றில் ஆன்மீகமும், அரசியலும் எப்படிக் கலந்து செயல்பட்டிருக்கிறது என்பதற்கான ஒரு பதிவு இது.
Be the first to rate this book.