அநேகமாக எந்த விஷயத்திலும் ஆண்களும் பெண்களும் ஒரேமாதிரி சிந்திப்பதோ நடந்துகொள்வதோ இல்லை. எதற்காக ஆண் கோபப்படுகிறான்? எது அவனை மகிழ்ச்சி கொள்ளவைக்கிறது? காலை அலுவலகம் கிளம்பும்போது இருக்கும் உற்சாகம் மாலை வீடு திரும்பும்போது மங்கிவிடுவது ஏன்? ஆண்களின் உலகம் எப்படி இயங்குகிறது? அவர்களை எப்படிப் புரிந்துகொள்வது? இந்த ஆண்கள் ஏன்தான் இப்படி நடந்துகொள்கிறார்களோ என்று வருந்தாமல், அவர்கள் அப்படி நடந்துகொள்வதற்கான காரணத்தைக் கண்டறிய முடியுமா? ஆண்கள் பிடிவாதக்காரர்களா? காதலை அவர்களுக்கு வெளிப்படுத்தத் தெரியாதா? ஆண்கள் தவறு செய்யும்போது சுட்டிக்காட்டக்கூடாதா? ஆண்களின் ஈகோவை காயப்படுத்துவது ஆபத்தா?
பெண்கள் காலம் காலமாக கேட்டுவரும் கேள்விகள் இவை. ஆண்களைப் பெண்கள் புரிந்துகொள்ளாவிட்டால் வீட்டிலும் அலுவலகத்திலும் ஒரு கணம்கூட நிம்மதியாக இருக்கமுடியாது. எனவே, ஆண்கள் பற்றிய சில அடிப்படைகளைப் புரிந்துகொள்ளவேண்டியது அத்தியாவசியம். ஆண்களின் அந்தரங்க உலகுக்குள் உங்களை அழைத்துச்செல்கிறது இந்த மினி என்சைக்ளோபீடியா. ஓர் ஆணின் சிந்தனை, செயல்பாடு, விருப்பம், எதிர்பார்ப்பு அனைத்தையும் உள்ளது உள்ளபடி படம் பிடிக்கிறது இந்நூல்.
Be the first to rate this book.