மன்மதனே! நீ வரும் வழியெங்கும் உன் பாதத்திற்கு எந்த உறுத்தலும் ஏற்படக்கூடாது என்பதற்காக நுண்மையான மணலைத் தூவியிருக்கிறேன். விடிவதற்கு முன்பாகவே நீராடி முடித்துவிட்டேன். முள் இல்லாச் சுள்ளிகளைத் தேர்ந்தெடுத்து உன்னை நோக்கி வேள்வி செய்கிறேன். உன்னை வரவழைப்பதும் உனக்காக இந்த வேள்வியைச் செய்வதும் எதற்காக என்பதை, நீ புரிந்துகொள்ள வேண்டும். இறைவனாகிய திருமால் மேல், நீ மலர் அம்பினை எய்ய வேண்டும். அந்த மலர் அம்பு பாய்ந்த பின்னர் அந்தத் திருமால் என்னைக் காணாமல் தவித்து என்னை நோக்கி வர வேண்டும். அந்தப் பணியை நீ எனக்காகச் செய்து அருள வேண்டும் என்பதற்காகத் தான் உனக்கு வரவேற்பு வழங்குகிறேன்.
Be the first to rate this book.