ஆண்டாளின் பாடல்கள் இறையனுபவத்தை முன்னிறுத்திச் சமயச் சொல்லாடலுக்கு மட்டும் முக்கியத்துவம் தரவில்லை. கண்ணனை யாரும் வழிபடலாம் என்ற சேதி, பிரதிக்குள் நுட்பமாகப் பதிவாகியுள்ளது. கண்ணன் மீதான ஈடுபாடு காரணமாக, அவரது பாடல் வரிகள், மரபிலிருந்து விலகித் தனித்து விளங்குகின்றன. மானுடப் பெண்ணான ஆண்டாளுக்கும் அமானுட ஆற்றலான கண்ணனுக்கும் இடையில் உறவுவேண்டி, ஏக்கமும் பாலியல் விழைவும் செறிந்த மொழியில் எழுதப்பட்டுள்ளன. ஆண்டாளின் கவிதை மொழியானது, பெண்ணின் அசலான குரலில் வெளிப்பட்டுள்ளது. ‘கீசு கீசு’ என்ற ஆனைச்சாத்தன் பறவையின் ஒலியும், தயிர் கடையும் மத்தின் ஓசையும் என விரியும் ஆண்டாளின் உலகம் புனைவுகளுக்கு இட்டுச் செல்லக்கூடியது.
Be the first to rate this book.