பிரிட்டிஷ் - இந்தியா உருவாக்கப்பட்ட காலனியாட்சிக் காலத்தில் பல நூற்றாண்டுகளாக மக்கள் பயன்பாட்டில் இருந்துவந்த பன்மையான மருத்துவ முறைகள்மீது ஆயுர்வேதமும் அலோபதியும் அவற்றின் ஒற்றைத் தன்மையை நிறுவுவதற்கு எத்தனித்தன. இந்நிலையில் தமிழ்ச் சித்த மருத்துவத்தைப் பாதுகாப்பதற்காக அதன் அறிவுப் பாரம்பரியத்தைத் தான் வெளியிட்டு வந்த ‘மருத்துவன்’ மாத இதழ் ஊடாக எடுத்துரைத்த ஆனந்தம்பண்டிதரின் அறிவுச் செயல்பாட்டை ஆவணப்படுத்தியுள்ளது இந்நூல். சித்த மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்றிருந்த அவர், படிநிலைச் சாதிமுறையின் பாதகமான விளைவுகளை உணர்ந்து, உடல் சீக்குக்குப் போன்றே சாதிச் சீக்குக்கும் சிகிச்சை செய்த சிந்தனைகளையும் இந்நூல் முன்வைக்கிறது.
Be the first to rate this book.