ஸலாஹ் ஸாலிஹ் ராஷித் 1963ல் குவைத்தில் பிறந்தார். மனோதத்துவவியலில் கலாநிதிப் பட்டம் பெற்ற இவர், இஸ்லாமியக் கலைகளிலும் எம். ஏ. பட்டம் பெற்றுள்ளார். ஆழ்ந்த இஸ்லாமிய அடித்தளம் கொண்டவராக இருக்கின்றமையால் பிரசித்திபெற்ற இஸ்லாமிய அறிவு ஜீவியாகவும் இவர் உள்ளார்.
Al Rashed Center என்ற பெயரில் மனித வள அபிவிருத்தி நிலையமொன்றை நிறுவி குவைத், துபாய், தவ்ஹா, தம்மாம், ஜித்தா, கெய்ரோ போன்ற இஸ்லாமிய உலகின் பல பிரதான நகரங்களில் அதனை இயக்கி வருகிறார். இஸ்லாமிய ஆளுமை உருவாக்கம் சம்பந்தமான ஆய்வுகள் பல செய்த இவர் தம் நிலையத்தின் ஊடாக இப்பணியைச் செய்கிறார்.
கலாநிதி ஸலாஹ் ஸாலிஹ் ராஷித் பல நூல்களில் ஆசிரியர். அவற்றில் மூன்று பிரதான நூல்களை மட்டும் கீழே தருகிறோம்.
1. உன் வாழ்வை எவ்வாறு திட்டமிடலாம்?
2. முஃமினாக இரு (மின்ஹாஜுல் காசிதீன்) என்ற நூலுக்கான சுருக்க விளக்கம்.
3. இஸ்லாத்தின் புனரமைப்பாளர்கள்
Be the first to rate this book.