உலகில் வாழும் அனைத்து மனித இனங்களும் சம உரிமை பெற்று வாழும் சுதந்திர உணர்வு படைத்தவை. ஆண்டான் _ அடிமை என்று பாகுபாடு இல்லாத உலகத்தைத்தான் அனைத்து இன மக்களும் விரும்புகின்றனர். உலகில் தோன்றிய மனித இனங்கள் ஒன்றுக்கொன்று சமம் அற்றவை என்ற சித்தாந்தம் ஆதிக்க இன மக்களிடம் வளர்ந்து, அந்த மனப்பான்மையே நிறவெறியாகவும் வளர்ந்தது. ஆப்பிரிக்காவிலும், அமெரிக்காவிலும் கறுப்பு இன மக்கள் அனுபவித்த கொடிய துயரங்கள் சொல்லி மாளாது. வெள்ளையர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியா மட்டும் அல்லாமல், தென் ஆப்பிரிக்கா உட்பட உலகின் ஏனைய நாடுகளிலும் விடுதலைக்கு ஆதரவான குரல்கள் ஒலித்தன. ஒவ்வொரு நாட்டிலும் தன்னலமற்ற தலைவர்கள் தோன்றி இன வெறிக்கு எதிராகப் போராடினார்கள். அந்த வகையில், ஆபிரகாம் லிங்கன், மார்ட்டின் லூதர்கிங் வழியில், அமெரிக்காவிலிருக்கும் கறுப்பு இன மக்களுக்கு விடிவெள்ளியாகத் தோன்றி, அங்கே அதிபர் வேட்பாளராக போட்டியிடும் தகுதிக்கு உயர்ந்திருக்கிறார் பாரக் ஒபாமா!
Be the first to rate this book.