ஆலய வழிபாட்டில் தமிழுக்கும், அதில் அனைத்துச் சாதியினரும் பங்கு கொள்ள வேண்டும் என்ற உரிமைக் குரலுக்கும் ஆதரவான பக்தர்களைத் திரட்ட வேண்டும். மற்ற பக்தர்களில் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த பிரச்சாரம் செய்ய வேண்டும். ஆகமத்தில் மொழி, சாதி பேசப்படவில்லை என்ற உண்மையைப் புரிய வைக்க வேண்டும். ஆகம வழிபாடு வேறு. வேத வழிபாடு வேறு என்ற உண்மை உணர்த்தப்பட வேண்டும். ஆகமும் எப்படியெல்லாம் மாறிப் போனது. சிவாச்சாரியார்களால் மீறப்பட்டது என்ற தகவல் பக்தர்கள் செவியில் ஏற்றப்படவேண்டும். ஆகமம் பற்றியும், ஆலயம் பற்றியும் சரியான புரிதல் ஏற்பட்டால், தமிழ் வழிபாட்டிற்கும் அதில் அனைத்துச் சாதியினரும் பங்கு பெறும் உரிமைக்கும் ஆதரவாக பக்தர்கள் எழுவார்கள். ஆகமத் தடை என்ற அகத்தடை அகலவேண்டும். அதற்கு இந்த நூல் பயன்படும்.
Be the first to rate this book.