இந்த நூலின் முக்கிய நோக்கம், சாதாரண வாசகர்களுக்கு மதுரையைப்பற்றிய எல்லா விவரங்களையும் ஒரே நூலில் தரவேண்டுமென்பதுதான். ஏனெனில், பல சிறந்த சரித்திர ஆசிரியர்களும் ஆய்வாளர்களுமான பேராசிரியர் ராஜய்யன், ஆய்வாளர் தேவகுஞ்சரி, பேராசிரியர் ஜெயச்சந்திரன் ஆகியோர் மதுரையின் பல சிறப்புகளைத் தங்களது ஆய்வின்படி வழங்கியுள்ளனர்.அதேபோல, பல பழைய ஆய்வாளர்களான சத்தியநாதய்யர், சேதுராமன் போன்றவர்கள் தம் கடின உழைப்பின்மூலம் பல உண்மைகளைக் கண்டு பதிப்பித்துள்ளனர். இந்நூல் அவற்றையெல்லாம் துணையாய்க்கொண்டும், இன்றைய தொல்லியல் ஆய்வாளர்கள் உதவியுடனும், காலத்தால் பழைமை வாய்ந்த பதிவேடுகளில் உள்ள செய்திகளோடும் மதுரையின் சரித்திரத்தை முடிந்தவரையில் ஒரே இடத்தில் முழுமையாய்க் கொடுக்க முயல்கிறது. எடுத்துக் கூறுகையில் விருப்பு வெறுப்பின்றி, நிகழ்ந்தவற்றை அப்படியே பதித்துள்ளேன். இந்நூலின் நோக்கம், தொன்மையான, தமிழ்நாட்டுப் பண்பாட்டுத்தலைநகரான மதுரை சாதாரண வாசகனுக்கு முழுமையாய்த் தெரிய வேண்டுமென்பது மட்டுமே!
Be the first to rate this book.