ஆலாவின் கதையுலகம் வெவ்வேறு நிலப்பரப்புகளை அறிமுகப்படுத்துவதோடு உயிர் வாழ்வதின் ஆனந்தத் திளைப்பையும் வாசகருக்குக் கடத்துகிறது. இயற்கையும் நடனமும் இணைந்து உருவாக்கும் புத்தம் புதுப் பாதையில் நோயுற்ற நலிந்த மனங்கள் மீண்டும் தங்களின் சொந்த இருப்பிற்குத் திரும்பும் அற்புதம் இப்புதினத்தின் பக்கங்களில் விரவிக் கிடக்கின்றன.
நிகழின் மிகத் துல்லிய கணத்தில் வாழும் வாழ்க்கை முறையை அறிமுகப்படுத்தும் இந்நூல், தமிழ் கதையுலகத்திற்கு மிகவும் புதிது.
சிலந்தி வலைப் பின்னலைப் போலப் பல்வேறு கதையிழைகளைக் கொண்டு நெய்யப்பட்டிருக்கும் இந்நாவல், வாசிப்பின்பத்தின் முழுத் திளைப்பையும் வாசகருக்குப் பரிசளிக்கிறது. சிறுமைகளில் உழலும் மனங்கள் துன்பத்திலும் சோர்விலும் சிக்குண்டு- நினைவுகளின் எச்சத்தை விழுங்கி, ஓர் இறந்த வாழ்வையே வாழ்கின்றது. விடுதலையடைந்த சுயம்தான் முழுமையான வாழ்வை வாழ முடியும் ஆலா அதற்கானப் பாதையை அமைத்துத் தரும் ஒரு நிகழ்வு.
Be the first to rate this book.