இந்நூல் சங்க இலக்கியத்தில் ஆநிரை கவர்தல்,ஆநிரை மீட்டல் என்னும் அடிக்கருத்தில் புலவர்கள் பாடிய பாடல்களைப் பற்றிய சிறிய ஆய்வாகும்.
இச்சிறுநூலில் சங்ககாலப் புலவர்கள் வேட்டுவக் குடியைச் சேர்ந்த இனக்குழு மக்களைப் பற்றி கொண்டுள்ள மதிப்பீடுகளைப் பற்றி ஆய்வு செய்யவில்லை. மாறாக அம்மக்களைப் பற்றிய பதிவுகளில் காணப்படும் (புலவர் மரபில்) சில சிக்கல்களைப் பற்றியும், புலவர் பதிவுகளுக்கு முன்னோடியாக இருந்திருக்கக்கூடிய பாணர் மரபு எனும் வாய்மொழிக்கிடங்கு பற்றியும், அப்பாணர் மரபின் சமூக அடிக்கட்டுமானம் பற்றியும், அதன் தொன்மை பற்றியும் ஆய்வு செய்வது இந்நூலின் நோக்கமாகும்.
Be the first to rate this book.