காவிரிப் படுகையில் தற்போது ஹைட்ரோகார்பன் எரிவாயு இரண்டாம் கட்டத் துரப்பணப் பணிகளுக்காக மத்திய அரசு தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் அளித்துள்ளது என்பது அண்மைத் தகவல்.
சில ஆண்டுகளுக்கு முன் இதே போல மீத்தேன் எரிவாயு எடுக்க 'தி கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி' என்ற தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் அளித்தது. அதன் காரணமாய் கீழத் தஞ்சையில் வெடித்தெழுந்த மீத்தேன் எதிர்ப்பு போராட்டத்தின் வீரியத்தால் அந்த தனியார் நிறுவனத்திற்கு தரப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது வரலாற்று உண்மை.
அலையலையாய் ஆண்களும், பெண்களும் திரண்டு தங்கள் வாழ்வாதாரத்தை கெடுக்கும் நாசகார எரிவாயு திட்டத்தை தங்கள் பகுதியிலிருந்து விரட்டியடித்தார்கள். சாதி மதம் கடந்து கல்லூரி மாணவர்கள், விவசாயப் பெருமக்கள் செய்த இந்த மகத்தான சாதனையை சொல்வதே எனது 'ஆக்காட்டி' நாவல்.
மக்கள் ஒன்று திரண்டால் அவர்களை வெல்ல எவராலும் முடியாது. மீத்தேன் எதிர்ப்புப் போராளிகளுக்கு சமர்ப்பிக்கப்பட்ட இந்த நாவலில் தலைமுறை கடந்த தாத்தா பேரன் உறவு. தமிழக மண்ணுரிமைப் போராளிக்கும், சொந்த மண்ணை விட்டு துரத்தப்பட்ட ஈழப் பெண்ணுக்கும் இடையிலான காதல் என பல சுவையான கதைகளை போர்க்களத்தின் வாயிலாய் சொல்வதே 'ஆக்காட்டி' நாவல்.
Be the first to rate this book.