பரீட்சைகளை முதலில் வைத்துவிட்டுப் பிறகு பாடங்களைச் சொல்லித்தருவதுதான் வாழ்க்கை. எத்தனை எத்தனை விசித்திரங்கள்,விநோதங்கள், புதிர்கள்! விடைகளைத் தேடி நீண்டு கொண்டே செல்கிறது பயணம்.
ஆகாசத்தில் பூக்கும் தாமரையைப் பறிக்கத்தான் போகிறேன் என்கிறான் அவன். இல்லை,இல்லை, தாமரை சேற்றில் பூக்கும் பூ,வானத்தில் தேட வேண்டியதில்லை என்கிறாள் அவள். இரு வேறு பாதைகள். இரு வேறுகோணங்கள். ஒன்று கனவு. இன்னொன்று யதார்த்தம். ஏதோ ஒரு புள்ளியில், இரண்டும் இணைந்து விடுகின்றன.
ஒழுங்கு, முரண்பாடு எல்லாமே மனம் சிருஷ்டிக்கும் மாயத் தோற்றங்கள்தாம்.எனில், எது அசல்? எது போலி?
கனவு, யதார்த்தம், நகைச்சுவை -வாழ்க்கையை நகர்த்திச் செல்லும் இந்த மூன்றும், இ.பா.வின் இந்நாவலில் பிரிக்கமுடியாதபடி பிரமாதமாகப் பின்னிப் பிணைந்திருக்கின்றன.
Be the first to rate this book.