நோபல் பரிசுகள், உலக அளவில் மெச்சப்பட்ட ஆராய்ச்சிகள், சாதனை கண்டுபிடிப்புகள் போன்ற பட்டியல்களில் இந்தியர்களின் பெயர்களை விரல் விட்டு எண்ணி முடிக்கலாம். ஆனால், விண்வெளியை வசப்படுத்திய நாடுகளைப் பட்டியலிட்டால், டாப் 5 இடங்களுக்குள் நாம் வந்துவிடுவோம். சந்திரயான், மங்கல்யான், ஏவுகணைகள் என நம் சாதனைகள் அதிகம். இதற்குக் காரணம், ராக்கெட் என்ற ஒரு வஸ்து போர்க்கருவியாகப் பயன்பட்டது இந்த மண்ணில்தான்.amp;nbsp;மைசூரின் திப்பு சுல்தான் குடும்பத்தினர் போருக்காக உருவாக்கிய ராக்கெட்களிலிருந்தே மேற்கத்திய நாடுகள் நவீன ராக்கெட்டின் உருவாக்கத்தைப் பாடமாகப் படித்தன. இன்றைக்கும் ஐரோப்பிய மியூசியங்களில் திப்புவின் ராக்கெட்கள் பாதுகாக்கப்படுகின்றன. திப்புவுக்கும் முந்தைய கால இந்திய நூல்களிலும் ராக்கெட் பற்றிய குறிப்புகள் உண்டு. அவற்றிலிருந்து ஆரம்பித்து, அப்துல் கலாம் காலம் வரை இந்திய ராக்கெட்டின் வரலாற்றை எழுதியிருக்கிறார் சி.சரவணகார்த்திகேயன். ‘குங்குமம்’ இதழில் வெளியாகி பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் வரவேற்பைப் பெற்ற தொடர், நூலாக்கம் பெற்றுள்ளது..
Be the first to rate this book.