அத்வைதம் வேதங்களின் கருப்பொருளை உள்ளடக்கியதே. ஞானகாண்டத்தில் காணப்படும் கருத்துக்களின் விரிவாக்கமே அத்வைதம். நாம் காணும் இந்தப் பிரபஞ்சம் ஒரு தோற்ற மயக்கமே. காட்சிப் பிழையே. மனஉணர்வுகளின் புறவெளிப்பாடே. பொய்மையின் பிம்பமே. பிரும்மத்தின் நிழலே. இனிய கனவுகளின் மாயாஜாலமே. இல்லாத ஒன்றை இருப்பதாகக் காட்டும் கண்கட்டு வித்தையே. இறைவனின் திருவிளையாடலே. கர்மாக்களால் எந்தப் பயனும் இல்லை. மதச்சடங்குகள் அர்த்தமற்றவை. சாஸ்திரங்கள் தேவையற்றவை. உயிர்ப்பலி கொடுமையானது. இவைகளால் எந்த நற்பயனும் விளையாது. ஞானமார்க்கம் ஒன்றுதான் இறைவனிடம் அழைத்துச் செல்லும். 'நான் யார்' என்ற ஆத்மவிசாரணை செய்யாமல் மெய்ப்பொருளை உணர முடியாது.
Be the first to rate this book.