இதே கட்டுரையில் வெறும் சினிமா விஷயங்களை மட்டும் சுவாரஸ்யமாகச் சொல்லிச் சென்றுவிடாமல், ‘ஒரு தாளத்தில் இசையமைப்பது சந்தம்’ ‘பல தாளங்களில் இசையமைப்பது பந்தம்’போன்ற முக்கியமான செய்திகளை நமக்கு உணர்த்தி விடுவதுதான் மம்மதுவின் சிறப்பு. சினிமா மெல்லிசை என்பது எப்படி நாட்டார் வடிவ இசை, செல்லியல் இசை எனப் பயணப்பட்டு இன்றைய தலைமுறை இசையமைப்பாளர்கள் வரை வந்துள்ளது என்ற விஸ்தாரமாக ஆராயும் இக்கட்டுரை ஒரு முக்கியமான ஆவணம்.
Be the first to rate this book.