Crime Fiction என்றழைக்கப்படும் குற்றப் பின்னணி கொண்ட துப்பறியும் புதினங்களின் வருகை 19ம் நூற்றாண்டில் இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் தொடங்கி அதன்பிறகு உலகின் மற்ற பகுதிகளுக்குப் பரவியது. மற்ற எந்த வகைப் புனைவுகளை விடவும் துப்பறியும் கதைகளுக்கு வாசகர்களிடையே எப்போதும் தனிப்பட்ட வரவேற்பு இருக்கும். காரணம், அவற்றின் உளவியல் தாக்கம்.
எழுத்தாளர் வானதியின் மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ள ‘ஆபத்தான விளையாட்டு’என்ற இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் சுவாரசியமானவை. உலகின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளர்களின் துப்பறியும் கதைகள் இத்தொகுப்பில் சிறப்பாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
துப்பறியும் கதைகளில் வரும் கதை மாந்தர்களுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் வாசகர், சற்று நேரம் தன் அன்றாட வாழ்விலிருந்து விலகி வேறொரு உலகத்தில் வாழ்ந்துவிட்டுத் திரும்புகிறார். அந்த வகையில் இத்தொகுப்பில் உள்ள கதைகள் வாசகர்களுக்குப் புதுவிதமான அனுபவத்தைத் தரும் என்பதில் சந்தேகமில்லை.
Be the first to rate this book.