ஒரு விஞ்ஞானி, எழுத்தாளர், கவிஞர், ஆசிரியர், தொலைநோக்குப் பாரவையாளர், மேலும் நமது பாரத தேசத்தின் 11-வது குடியரசுத் தலைவர், மேன்மேலும் பல தகுதிகள் பெற்றவர் – டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம். சமீப காலங்களில் அதிகமாக அனைவராலும் நேசிக்கப்படும், பாராட்டப்படும் நபர் டாக்டர் கலாம், இந்திய மக்களின் திறமையிலும், அதுவும் இளைஞர்களின் திறமையிலும், ஆணித்தரமான நம்பிக்கை வைத்திருந்த பல நற்குணங்கள் நிரம்பிய மனிதநேயம் மிக்க மாமனிதர்.
கற்பனைக்கெட்டாத உயரத்தைத் தொட்டவர். ஆனாலும் எளிமையான தனது ஆணிவேரை மறக்காதவர். தனது கைப்பட்ட எந்த ஒரு துறைக்கும், அதற்கென ஒரு தனிப் பெருமையை முத்திரை பதித்த ஓர் எளிய மனிதர். அவர் நமக்கு முழு அர்ப்பணிப்புடன் கூடிய கடின உழைப்பின் சக்தியையும், நேர்மை மற்றும் நன்னடைத்தையின் பெருமையையும் உணர்த்தியவர். இவை அனைத்திற்கும் மேலாக நமக்கு கனவுகளின் சக்தியை உணர்த்தியவரும் அவரே.
‘உறக்கத்தில் வருவதல்ல கனவு, உன்னை உறங்க விடாமல் செய்வதே கனவு’ என்பார். அவரது வாழ்க்கை வரலாறு அவரது இக்கூற்றை மெய்ப்படுத்தும் ஒரு நற்சான்றாக விளங்குகிறது.
Be the first to rate this book.