ஐந்து நாட்களுக்கு முன்பு யெக்கரின் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டிருந்தன. டயர் பஞ்சராக்கப்பட்டிருந்தது. யெக்கருக்குத் தன் புதல்வன் கமாலின் ஞாபகம் வந்தது. கமாலும் இப்படித்தான் மூளைச் சலவை செய்யப்பட்டிருந்தான். இவர்கள் யாரும் இனிமேல் சிறுவர்கள் அல்ல. இவர்கள் மரணத்தோடு ஒப்பந்தம் செய்து கொண்டவர்கள். மனிதர்களின் குரல்வளையைக் கடித்துக் குதறும் நாய்களைப் போல் இவர்கள் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் கொலை செய்யும் போது இவர்களின் புருவம் கூட உயர்வது இல்லை . இந்தச் சிறுவர்களுக்கு இந்த உலகத்தில் பெற்றுக்கொள்ள எதுவும் இல்லை. கலாச்சாரமோ, இலக்கியமோ, இசையோ, நடனமோ, பொழுதுபோக்கோ, விளையாட்டோ, உறவோ, பந்தமோ, பாசமோ, கனவுகளோ, நம்பிக்கையோ எதுவுமே இல்லை. இவர்கள் மற்றவர் உயிரை எடுக்கவும் தங்கள் உயிரைக் கொடுக்கவும் தயாராக இருக்கிறார்கள் 'சத்தியத்தின் வாழ்க்கை வேறோர் இடத்தில் இருக்கும்போது நியாயமும் தர்மமும் இல்லாத, பாவங்கள் மட்டுமே நிறைந்த இந்த உலக வாழ்க்கையில் என்ன இருக்கிறது?' என்பதே இந்தச் சிறார்களின் மனதில் நிறைந்திருக்கும் கேள்வி.
-புத்தகத்திலிருந்து
Be the first to rate this book.