சலிப்பூட்டும் தேர்வும், தேர்வில் பெறப்படும் மதிப்பெண்களும் தான் ஒரு மாணவனின் தலையெழுத்தை நிர்ணயம் செய்கிறது. உணர்வுகள் உள்ளடக்கிய மூச்சும், விகற்பமில்லா பேச்சும் ஏனோ கவனிக்கப்படுவதில்லை. காலம் காலமாய் மூளைச் சலவை செய்யப்பட்ட சமூகம் இப்புத்தகத்தில் வரும் நிகழ்வுகளைப் பல்வேறு விதமாய் விமர்சிக்க வரிந்துகட்டிக் கொண்டு வரலாம் அல்லது வர நேரமில்லாமலும் போகலாம்.
வே.சங்கர் அவர்கள் சிறுகதை, கவிதை, கட்டுரை, நூல்விமர்சனம் மற்றும் சிறார் இலக்கியம் சார்ந்து பல்வேறு தளங்களில் தொடர்ந்து எழுதிவருகிறார். இவரது படைப்புகளில் “எட்டாம் வகுப்பு ‘சி’ பிரிவு” “கானகத்தில் ஒரு கச்சேரி” மற்றும் “டுட்டுடூ” ஆகிய சிறார் நூல்கள் மாணவர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றவை. இவரது கவிதைத் தொகுப்பு “அறுபது வயது அதிரூபன்” அமேசான் கிண்டிலில் இ.புத்தகமாக வந்துள்ளது.
Be the first to rate this book.