கவிதை ஒரு பெரும் கடல் அதற்குள் கோடிக்கணக்கான உயிரினங்கள் இருக்கின்றன அனைத்தையும் அது பொருந்திக் கொள்கிறது ஆயினும் அதன் அடிப்பகுதியின் நகர்வு பூமிக்கு பெரும் மாற்றத்தை விளைவிக்கின்றது கவிதையினால் யாதொரு தீங்கும் இதுவரை நடந்ததில்லை மாறாக ஒரு மனிதனுக்கு அது புத்துணர்ச்சியை, புதிய விடியலை, காதலை, இளமையை, அன்பை, சமூக அக்கறையை ,பால்யத்தை விளைவித்துக் கொண்டே நகர்கிறது ஆயினும் எப்போதாவது அதன் வீரியம் உக்கிரமடையும்போது தன் நெஞ்சு குறுகுறுக்க வாசிப்பாளன் கையறு நிலையில் மண்டியிட்டு அழுதலையும் சகித்துக் கொள்கிறது கவிதை.
- சாரா
Be the first to rate this book.