மாவட்ட வரலாறு, மாவட்டச் சிறப்புகள், வழிபாட்டுத் தலங்கள், சுற்றுலா இடங்கள், மண்ணின் மைந்தர்கள், தொழில்வளம், நினைவகங்கள், இன்னும் பல வரலாற்று ஆதாரங்களோடும் வண்ண புகைப்படங்களோடும் இணைக்கப்பட்டு வெளிவந்திருக்கும் சிறப்பான நூல் இது.
----------------------
தமிழ் நாட்டைப் பற்றி முழுச் செய்திகளையும், மாவட்டங்கள் வாரியாகத் தொகுக்கப் பெற்றுள்ள இந்நூல் ஆயிரம் நூல்களை உள்ளடக்கிய ஒரு நூல்நிலையத்தைப் போன்ற ஒரு தொகுப்பாக வெளிவந்திருக்கிறது.
தமிழ்நாட்டை ஆட்சி செய்த மன்னர்கள், அயல்நாட்டினர், விடுதலை வரலாறு, அரசியல் மாற்றங்கள், மாவட்டங்களின் தோற்றம், விவசாயம் மற்றும் தொழில் வளர்ச்சி, வழிபாட்டுத் தலங்கள், சுற்றுலாத் தலங்கள் அந்தந்த மாவட்டத்தில் பிறந்து சாதனை நிகழ்த்திய சான்றோர்கள் என அனைத்துச் செய்திகளையும் உள்ளடக்கிய ஒரு செய்தி ஆவணமாக இந்நூல் வெளிவந்திருக்கிறது.
ஒரு மாவட்டம் பற்றியோ, அறிஞர்கள் பற்றியோ அம்மாவட்டத்தில் நடந்த அறிய செய்திகள் பற்றிக் குறிப்பிடும் போதோ நாள், ஆண்டு ஆகியவற்றை ஆதாரங்களுடன் பதிவு செய்திருப்பதிலிருந்து ஒரு வரலாற்று ஆய்வாளருக்கான தகுதியை இந்நூலாசிரியர் பெற்றிருப்பதையே இந்நூல் காட்டுகிறது.
சரித்திரத்தை இனிமேல் மாற்றி எழுத முடியாது. தமிழ்நாட்டின் சாதனைகளை இனிமேல் மாற்றி எழுத முடியும் என்ற உறுதிமொழியை இன்றைய இளைஞர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். சாதிக்கத் துடிக்கும் மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் இந்நூல் ஏணியாக உதவும். இந்நூலைப் படித்தவர்களுக்கு அது நன்கு விளங்கும். படித்துப்பாருங்கள் புத்தகத்திற்குள் தமிழ்நாடு இருக்கிறது. தமிழ்நாடு உலகம் முழுவதும் பரவப்போகிறது. அதற்கு இந்நூல் ஒரு தொடக்கப்புள்ளியாக விளங்கும்.
அன்பளிப்பு வழங்க உகந்த நூல் மட்டுமல்ல இது. அறிவையும் கூடுதலாக வழங்கத் தகுதிமிக்க நூல் இது.
- முனைவர் பொ.சங்கர் இ.ஆ.ப (இயக்குநர், செய்தி மக்கள் தொடர்பு மற்றும் அலுவலால் அரசு இணைச் செயலாளர்)
Be the first to rate this book.