அலைவரிசை ஒதுக்கீட்டில் ஊழல் எனப் பரவலாகப் பேசப்பட்டு வந்தது. ஒரு அழைப்புக்கு ஒரு ரூபாய் என இருந்த நிலையைப் போட்டிகளை உருவாக்கி 40 காசு என்றாக்கி சாமானியனும் பயன்படுத்த ஏற்பட்ட விரைவான வளர்ச்சியை ஊழல் எனச் சொல்லி எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் பூதாகரமாக உருவெடுக்கச் செய்தன. கருத்தியலிலான தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் தணிக்கை அறிக்கையைச் சுட்டிக்காட்டி நடைபெற்ற விவாதங்கள் நாடறிந்தவை. அதன் உண்மைத் தன்மையினை வெளிப்படுத்தும் நோக்கில் அமைந்ததே "2ஜி: அவிழும் உண்மைகள்" என்னும் இந்த நூல்.
முன்னாள் மத்திய அமைச்சரும் அலைக்கற்றை வழக்கில் மிகுதியாகப் பெசப்பட்டவரும் ஆகிய திரு. ஆ. இராசா அவர்கள் இந்த நூலை எழுதியிருக்கின்றார். அவர் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது நடைபெற்ற வழக்கு எடுத்துச் செல்லப்பட்ட முறை, நடைபெற்ற முறை, வேண்டுமென்றே உண்மைகள் மறைக்கப்பட்ட முறை இவற்றைத் தெளிவுபடுத்தும் வகையில் இந்த நூல் அமைந்துள்ளது.
சரியான சான்றாதாரங்கள் தொகுக்கப்பட்டு அவற்றின் அடிப்படையில் இந்த நூலை உருவாக்கியுள்ளார். இந்த நூலைப் படிப்போர் மேன்மக்கள் எனப்படும் மேலோரின் இயல்பினைக் காணலாம். திரு. ஆ. இராசா அவர்கள் பலிகடா ஆக்கப்பட்டிருப்பதையும் உணர முடியும்.
Be the first to rate this book.