“என்னைக்கு பிலிமு போய் டிஜிட்டல்ங்கிற மயிரு வந்திச்சோ அன்னைக்கு செத்தது சினிமா. கண்டவனெல்லாம் படமெடுக்க வர்றான். க்ளோஸ் எதுக்கு, மிட் எதுக்கு, வைட் எதுக்குனு கூட தெரியல. ஆவூன்னா கூட்டமா டேப்ளெட்ல சூழ்ந்துட்டு எட்டிப் பார்த்து, எட்டிப் பார்த்து படம் பண்ணுறானுங்க நானெல்லாம் கேமரா பக்கத்துல நின்னு போட்டோ போட எத்தனை வருஷம் ஆச்சு தெரியுமா?” என்றபடி ஒரே மடக்கில் ப்ராண்டியை குடித்த ராமராஜனுக்கு சுமார் நாற்பத்தி ஐந்து வயதிருக்கும். தொடர்ந்து சரக்கடித்து சாப்பிட்டு போட்ட சூயிங்கம் போல் இருந்தது அவர் முகம். கோ- டைரக்டர். 14 படங்களில் அஸிஸ்டெண்ட். 18 படங்களில் அசோசியேட். 32 படங்களுக்கு கோ டைரக்டர். லிஸ்டில் உள்ள சில படங்களுக்கு அவர் தான் நிஜமாகவே இயக்குனர். பட் பெயர் வெளியே வராது.
”தீண்டும் இன்பம் படத்துல ஹீரோ லவ் சொல்ற சீன். சவசவனு மொக்கையா எழுதியிருந்தான். சரசரனு பேப்பரை வாங்கி எட்டுப்பக்க சீனை மூணு பக்கமா எழுதி ஹீரோகிட்ட கொடுத்தேன். விளக்கெண்ணெய் குடிச்சாப்புல மூஞ்சிய வச்சிட்டு டயலாக் பேசினவன் அப்படியே ரொமாண்டிக்காயிட்டான். இன்னைய வரைக்கும் லவ் சீன்னா அது ஒரு லேண்ட்மார்க். ஆனா பேரு டைரக்டருக்கு. இன்னைய வரைக்கும் அவனால ஒரு நல்ல ரொமாண்டிக் வசனம் எழுதிர முடியுமா? இன்னைக்கும் லவ் ட்ராக் வேணும்னா.. என்னையத்தான் தனியாய் ரெசாட்டுக்கு கூட்டிட்டு போய் சரக்கு, பணம் எல்லாம் கொடுத்து எழுதி வாங்கிப்பான். லவ்னா பேண்ட கழட்டி வேலை செய்யுறதுனு நினைச்சிட்டிருக்கிறவன் எல்லாம் ரொமாண்டிக் டைரக்டர்”.
(நாவலிருந்து...)
Be the first to rate this book.