வாழ்க்கையில் திட்டமிடல் என்பது மிக மிக முக்கியம். ஒரு செயலை செய்யத் தொடங்குமுன் அதைப்பற்றிய திட்டமிடல் இருந்தால்தான் அந்தச் செயல் முழுமையடையும். ஆனால், இன்றைய இளைஞர்கள் எதிர்கால லட்சியமோ, வாழ்க்கை குறித்த திட்டமிடலோ இல்லாமல் சமூகவலைதளங்களிலும் செல்போனிலும் தங்கள் நேரத்தை விரயமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இன்றைய நவீன தொழில்நுட்பத்தையும் சமூக வலைதளங்களையும் பொழுதுபோக்குக்காக அல்லாமல் நம் திறமையை, எழுத்தை, புதிய கருத்தை அவற்றில் வெளிப்படுத்தினால் அதன்மூலம் புது உற்சாகமும் புதிய புதிய தொடர்புகளும் கிடைக்கும். எனவே, எந்தவிதமான இலக்கை நீங்கள் நிர்ணயித்தாலும் அதில் வெற்றிபெற சுயமதிப்பீடும், சிறந்த பழக்கவழக்கமும் தன்னம்பிக்கையும் இருந்தால் வெற்றிபெறலாம். அதற்கு இந்த நூல், 21 நாள் திட்டத்தைத் தந்து வழிகாட்டுகிறது. அதிகாலை எழுதல், சுயவிவரக் குறிப்பு எழுதுதல், ஒரு செயலை எப்போது செய்யக்கூடாது, எப்போது செய்ய வேண்டும் என்ற நேர நிர்வாகத்தின் முக்கியத்துவத்தும் போன்ற எளிய வழிகளைச் சொல்லி, நாம் நினைத்த எதையும் சாதிக்கலாம் என்று தெம்பூட்டுகிறது இந்த நூல். 21 நாள் அதிசயம் சொல்லும் வழிமுறைகளைக் கடைப்பிடியுங்கள், வெற்றி உங்களத் தேடி வரும்.
Be the first to rate this book.