தலை சிறந்த மனிதர்கள் வாழ்வில் நடந்த சுவாரஸ்யமும் வழிகாட்டலும் நிறைந்த சம்பவங்களைப் படிக்கும் போது அவை நம் மனதில் அப்படியே பதிந்துவிடும். அத்தகைய நிகழ்வுகளின் தொகுப்பே 200 அறிஞர்கள் காத்திருக்கிறார்கள் நூல்.
காந்தியடிகளின் நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தும் ஒரு குட்டிச் சம்பவத்தோடு தொடங்கும் நூல். பாரதியார், ஈ.வெ.ரா, பெரியார், உ.வே. சாமிநாதய்யர், அம்பேத்கார், ஜவஹர்லால் நேரு, அறிஞர் அணணா, துப்பறியும் நாவலாசிரியர் அகதா கிறிஸ்டி, ஆங்கிலக் கவிஞர் ஜான் மில்டன், தத்துவ ஞானி சாக்ரடீஸ், விஞ்ஞானி ஆல்பர்ட் ஜன்ஸ்டீன் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 200 அறிஞர்களின் வாழ்வில் நடந்த சம்பவங்களை ரத்தினச் சுருக்கமாக எளிய நடையில் எடுத்துரைக்கிறது. படிக்கவும், பிறரிடம் சொல்லி மகிழவும் சிறப்பான சொல்.
Be the first to rate this book.