இந்தியாவில் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டு 48 விட்டன. ஜனநாயகம், சர்வாதிகாரம், பரிமாணத்தை
யயாதி குரு குலத்திற்கும் யாதவக் குலத்திற்கும் பொது மூதாதை ஆவான், மஹாபாரதம் தவிர்த்து, பாகவத புராணம். வாயு புராணம், பிரம்மாண்ட புராணம், சிவ புராணம், ஹரிவம்ச புராணம் ஆகியவற்றிலும் இந்த யயாதி பேசப்படுகிறான்.
மகாபாரதத்தில் இவனது கதை ஆதிபர்வம் பகுதி 75 முதல் 93 வரையும், மீண்டும் உத்யோக பர்வம் பகுதி 106 முதல் 122 வரையும் சொல்லப்படுகிறது.
ஆதிபர்வத்தில், யயாதியையும் அவனது மகன்களையும் பேரர்களையும் பற்றிச் சொல்லப்படுகிறது. உத்யோக பர்வத்தில் யயாதியின் சொல்லப்படுகிறது. மகளைக் குறித்துச்
யயாதியின் கதையில், பல நீதிகள் உரைக்கப்படுவதை நாம் காணலாம். சுக்ராச்சார்யாருக்கும் தேவயானிக்கும் இடையில் நடக்கும் உரையாடல், கசனுக்கும் தேவயானிக்கும் இடையில் நடக்கும் உரையாடல், யயாதிக்கும் அவனது பேரர்களுக்கும் இடையில் நடக்கும் உரையாடல் ஆகியவை பல நீதிகளைக் குறித்துப் பேசுகின்றன.
சுக்ராச்சார்யாரின் பெண்ணான தேவயானியின் கதை. அக்காலத்தில் பெண்கள் தங்கள் கணவனைத் தேர்ந்தெடுப்பதில் எவ்வளவு சுதந்திரமாக இருந்தனர் என்பதை நமக்கு எடுத்துக் காட்டுகிறது.
சம்ஸ்கிருத மூலத்தில் இருந்து செய்யப்பட்ட பல ஆங்கில மொழிபெயர்ப்புகளையும் தமிழ் மொழிபெயர்ப்புகளையும் ஒப்பாய்ந்து, மிக மூலத்திற்கு நெருக்கமாக முழு மகாபாரதத்தையும் செ.அருட்செல்வப்பேரரசன் மொழிபெயர்த்திருக்கிறார். இது தமிழ் மொழிபெயர்ப்பு வரலாற்றில் ஒரு மைல்கல் என்றால் மிகையில்லை.
Be the first to rate this book.