தமிழ்நாட்டுக்கு இன்று மிகவும் தேவையான நூல். 1974 இல் அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்த மாநில சுயாட்சித் தீர்மானத்தை முழுமையாக அறிந்துகொள்ள இந்த தொகுப்பு உதவுகிறது. இத் தொகுப்பில் ராஜமன்னார் குழு அறிக்கை, முதல்வரின் தீர்மானம், அவற்றைத் தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் மேலவையிலும் நடந்த ஒரு வார கால அனல் பறக்கும் அறிவார்ந்த விவாதங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. ஏ4 அளவில் 600க்கும் மேற்பட்ட பக்கங்களில், கெட்டி அட்டையில், நீங்கள் தவறவிடக்கூடாத ஒரு புத்தகம்.
இந்தியாவில் மாநிலங்களின் உரிமைகள் காலில் போட்டு மிதிக்கக்கூடிய இந்த நூளில், உண்மையான ஒன்றிய அரசு என்ன செய்யவேண்டும் என்பதை நாற்பந்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாடு சொல்லிக்காட்டியிருக்கிறது. அன்றைய முதல்வர் கலைஞர் தன் வாழ்நாளில் செய்த மகத்தான சாதனை என்று இந்த மாநில சுயாட்சித் தீர்மானம் கருதப்படுகிறது.
கலைஞர் மு. கருணாநிதி. பேராசிரியர் க அன்பழகன், நாவலர் இரா நெடுஞ்செழியன், சிலம்புச்செல்வர் ம பொ சி, ஆலடி அருணா, கு மா பாலசுப்பிரமணியம், செ கந்தப்பன், மணலி சி கந்தசாமி, கே டி கே தங்கமணி, எச் வி ஹாண்டே, த ந அனந்தநாயகி, பொன்னப்ப நாடார், கோவை செழியன் உள்ளிட்ட தலைவர்கள் பங்குபெற்ற காராசாரமான விவாதங்களை படிக்கத் தவறாதீர்கள்.
Be the first to rate this book.