ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளாக எழுதிவரும் அசோகமித்திரன் தன்னுடைய படைப்பு மூலம் காலத்தைப் பின்னுக்குத் தள்ளிகொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் எழுதிய கதைகளும் இன்று எழுதும் கதைகளும் அவை எழுதப்பட்ட காலத்தை உதறிச் சமகாலத்தவையாகவே நிலைபெறுகின்றன. வாழ்க்கையின் அபத்தத்தையும் ஆச்சரியத்தையும் துக்கத்தையும் கனிந்த பார்வையுடனும் கருணையுடனும் எள்ளல் மிளிரும் நடையில் வெளிப்படுத்துகின்றன இந்தக் கதைகள். 'உண்மைக்கும் புரிதலுக்கும் உள்ள இடைவெளி' தான் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் எல்லாக் கதைகளுக்குமான மையப் பொருள்.கடந்த ஐந்தாண்டுகளில் அசோகமித்திரன் எழுதிய இருபத்து இரண்டு கதைகளின் தொகுப்பு இந்நூல்.
Be the first to rate this book.